துரை­வந்­தி­ய­மேடு ஸ்ரீ மாணிக்­கப்­பிள்­ளையார் ஆலய மகா கும்­பா­பி­ஷேகம் எதிர்­வரும் 12 ஆம் திகதி சனிக்­கி­ழமை ஆரம்­ப­மாகும்.
இவ் ஆலய மகா கும்­பா­பி­ஷேக முக்­கிய நிகழ்­வு­க­ளான எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு எதிர்­வரும் 13 ஆம் திகதி ஞாயிற்­று­கி­ழமை காலை 7.30மணிக்கு ஆரம்­ப­மாகி மாலை நான்கு மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.
இத­னை­ய­டுத்து எதிர்­வரும் 14ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மகாகும்­பா­பி­ஷேகம் இடம்­பெ­ற­வுள்­ளது.
இக்­கும்­பா­பி­ஷேக கிரியா கால நிகழ்­வுகள் தெல்­லிப்­பளை துர்க்­கா­தேவி தேவஸ்­தான பிர­தம குரு கிரியா கலாவித்­தகர் பிரம்­மஸ்ரீ சுந்தர செந்தில் ராஜ சிவா ச்சாரியார் தலைமையில் நடைபெறும்.

கருத்துரையிடுக

 
Top