நூறு வீதம் முஸ்லிம்களை  கொண்ட மருதமுனை கிராமத்தில்  வெள்ளிக்கிழமை ஜும்மா  தொழுகையை நடத்தாமல்  கல்முனை பொலிசார் தடுத்து  நிறுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது. கல்முனை நீதிமன்றின் உத்தரவுக்கமைய  குத்துபாவை  தடுத்து நிறுத்தியதாக  கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார்  தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பாக நிலையப் பொறுப்பதிகாரி தகவல் தெரிவிக்கையில்   மருதமுனை ஜாயா  வீதியில்  இயங்கி வரும் ஸ்ரீ லங்கா தௌஹீத்  ஜமாஅத்  காரியாலயத்தில்  திடீரென  ஜும்மா  தொழுகை நடத்த இருப்பதாக  மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளரினால்  கல்முனை பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை  விசாரணை செய்த போது  

கொழும்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத்  ஜமாஅத்  காரியாலயத்தின்  கிளை அலுவலகமாக  மருதமுனை காரியாலயம் புத்த சாசன  மற்றும் மத அலுவல்கள் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடமாக  இயங்கி வரும் இவ்வலுவலகதில் கடந்த வெள்ளிக் கிழமை ஜும்மா  தொழுகை இடம் பெறவிருந்த நிலையில் இதற்க்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை செய்த போது  புத்த சாசன  மற்றும் மத அலுவல்கள் அமைச்சின்  2011/9   BSRA /BRA /03/CON /ஜென/2011 மற்றும் பொலிஸ்  மா அதிபரின் 2008/10/16/P /03/227 இலக்க  சுற்று நிருபங்களின் படி பள்ளிவாசலை புதிதாக அமைப்பதென்றாலும் ,பள்ளிவாசலை ஆரம்ப்பிபதென்றாலும்  புத்த சாசன  மற்றும் மத அலுவல்கள் அமைச்சில் அனுமதி பெறுவதுடன்  வக்பு சபையின் அனுமதியுடன் அங்கும் பதிவு செய்யப்பட வேண்டும் .

இவை எதனையும் செய்யாமல் கொழும்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத்  ஜமாஅத்  காரியாலயத்தின்   அனுமதி மாத்திரம் வழங்கப் பட்டுள்ளதாக விசாரணையின் மூலம்  அறியவந்துள்ளது.  இந்த விடயமாக  முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம்  பிரதேச மக்களின் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு  இதனை கல்முனை நீதிவான் நீதி மன்றுக்கு   ஸ்ரீ லங்கா தௌஹீத்  ஜமாஅத்  காரியாலயத்தின்   செயலாளர் உட்பட ஐந்து அங்கத்தவர்களை  சாட்டுதல் செய்த போது  நீதிவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி  ஜூட்சன்  குத்துபா  தொழுகைக்கான அனுமதியை இரத்து செய்வதுடன் . தொழுகை இடம்பெறும் இடமாக பிரகடனப் படுத்துவதானால் மேற்படி சுற்று நிருபங்களில் கூறப்பட்ட அனுமதி பெறப்பட வேண்டும் எனவும்  நீதி மன்ற உத்தரவை மீறி  குறித்த அலுவலகத்தில் தொழுகை இடம்பெற்றால்  குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப் படும் என  எச்சரிக்கப் பட்டனர் . குறித்த இடத்தில பள்ளிவாசல் கட்டுவதற்கோ ,தொழுகை நடாதுவதற்கோ  மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கை அனுமதி கிடைத்தாலும் அந்த அனுமதி பொலிசாருக்கு காண்பிக்கப் பட வேண்டும் எனவும்  நீதிமன்றினால் தெரிவிக்கப் பட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். மருதமுனையில் 14 பள்ளி வாசல்கள் இயங்குவதாகவும் இந்த நிலையில் சிறு குழுவினரின் இந்த செயற்பாடு சமுக பிணக்கை வளர்க்கக் கூடாதெனவும்  அவர் மேலும் தெரிவித்தார் 

இதே போன்று சமீபத்தில் கொழும்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத்  ஜமாஅத்தினரின்  சாய்ந்தமருது கிளை  கடற்கரை ஓரத்தில் பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கு முயற்சித்த போது  அந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் இது தேவையற்றது என்றும் அருகில் ஏற்கனவே பள்ளிவாசல் இருப்பதாகவும்  தெரிவித்து  பொலீசில் முறைப்பாடு செய்துள்ளனர் . இந்தவிடயம் தொடர்பாக  விசாரித்த போது  பள்ளிவாசல் அமைக்கப் பட்ட இடம் அரச காணியாகும்  எனவும்  இந்த காணிக்கு போலி ஆவணங்கள் தயாரிக்கப் பட்டிருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக  கல்முனை போலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கப்பார் மேலும் தெரிவித்தார் . அது போன்று  கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட சில கிராமங்களில் அனுமதியற்ற இடங்களில் கொட்டில் கல் அமைக்கப் பட்டு தொழுகை நடத்தப் படுவதாகவும் அறிய முடிகின்றது. நீதி மன்ற கட்டளைப் பிரகாரம் சகலருக்கும்  சட்டம் பிரயோகிக்ப் படும் எனவும் அவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top