புதிய பிரதியமைச்சர் பதவிகளை அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கு ஜனாதிபதி பகிர்ந்தளிக்கவுள்ளதாக தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரžஸ் ஒருவருக்கும் நுரரெலியா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இந்த பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் உத்தியாகவும், சிறுபான்மை கட்சிகளின் ஆரவினைப் பெறுவதற்குமே இந்த பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top