(அகமட் எஸ். முகைடீன்)
மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டலை வழங்கும்வகையில் இங்கிலாந்தில் உள்ள மன்னார் நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் மெற்றோபொலிடென் கல்வி நிறுவனத்தினால் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறி அங்குரார்பண நிகழ்வு மன்னாரில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.

மன்னார் மாவட்ட மாணவர்கள் இலகுவாக தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும்வகையிலும் உர்கல்வியினை தொடர்வதற்கு ஏதுவாகவும் குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பித்துவைக்கப்பட்டது.


இதன்போது இக்கற்கை நெறியினை தொடரவுள்ள மாணவர்களுக்கு அனுமதிப் பத்திரங்களும் புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

 
Top