கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சி திணைக்­க­ளத்தில் நிலவும் வரு­மான அத்­தி­யட்­சகர் பதவி வெற்­றி­டங்கள் விரைவில் நிரப்­புவதற்கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண முத­ல­மைச்சின் செய­லாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
“மொத்தம் 62 வரு­மான அத்­தி­யட்­சகர் பதவி வெற்­றி­டங்­களில் 32 வெற்­றி­டங்கள் தற்­போது சேவை­யி­லுள்ள வரு­மான மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு பதவி உயர்வு வழங்கி நிவர்த்­திப்­ப­தற்கும் மீதி 30 வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­தாக ஆட்­களை சேர்த்துக் கொள்­வ­தற்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வருகின்றன/
இத்­திட்­டத்தின் முதற்­கட்­ட­மாக கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் கட­மை­யாற்றும் வரு­மான மேற்­பார்­வை­யா­ளர்கள் நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் தகு­தி­யான 32 பேர் வரு­மான அத்­தி­யட்­சகர் பத­விக்கு தர­மு­யர்த்­தப்­ப­டுவர்.
புதி­தாக 30 வரு­மான அத்­தி­யட்­ச­கர்­களை நிய­மிப்­ப­தற்­கேற்ற வகையில் விரைவில் விண்­ணப்பம் கோரப்­ப­ட­வுள்­ளது. எழுத்­துப் ­ப­ரீட்சை, நேர்­முகப் பரீட்சை என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையில் புதி­ய­வர்­க­ளுக்­கான நிய­ம­னக்­ க­டி­தங்கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.
இதே­வேளை கிழக்கு மாகாண உள்­ளூ­ரா ட்சி சபை­களில் கட­மை­யாற்றும் சார­திகள், சிற்­றூ­ழி­யர்கள் சுமார் 600 பேருக்கு பதவி உயர்வு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதுவும் பரீட்சை, நேர்­மு­கப்­ப­ரீட்சை என்­ப­வற்­றி­னூ­டாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான விண்­ணப்­பமும் விரைவில் கோரப்­ப­ட­வுள்­ளது.
கிழக்கு மாகாண உள்­ளூ­ராட்சித் திணைக்­களம் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் என்­ப­ன­வற்றில் கட­மை­யாற்றும் சார­திகள், சிறு பணி­யா­ளர்கள் நீண்டகாலம் பதவி உயர்­வின்றி பணியாற்றி வருவதாக முதலமைச்சரின் கவனத்திற் கொண்டு வரப்பட் டதையடுத்தே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top