சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக  நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பாரிய மற்றும் நடுத்தர சத்திர சிகிச்சைகளை செய்த  சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள் யு.ஏ.சமீம்  உயர் கற்கைக்காக புலமை பரிசு பெற்று  இருவருடங்கள் சிங்கபூர்  செல்கின்றார் .
அவருக்கான பிரியாவிடை வைபவம் நேற்று   திங்கட் கிழமை (14) வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசீஸ் தலைமையில் நடை பெற்றது . சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் அங்கு உரையாற்றும் போது  சம்மாந்துறை வைத்திய சாலையில் வளப்பற்றாக்குறையுடன்  இரண்டு வருடங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சத்திர சிகிச்சைகளை செய்துள்ளோம் . இங்கு செய்யப்பட்ட பல சத்திர சிகிச்சைகள் இந்த வைத்திய சாலையில் செய்ய முடியாதது இருப்பினும் எமது அர்பணிப்புடன் செய்யப்பட்டு வெற்றி  கண்டுள்ளோம் . அந்த வெற்றிகளுக்கு இறைவன் துணையாக இருந்தாலும் . இங்குள்ள வைத்தியர்கள் ,தாதியர்கள்  ஊழியர்கள் எனக்கு முழு உதவியாக இருந்துள்ளார்கள் அவர்களுக்கு நன்றி   கூறுகின்றேன் .

இந்த வைத்திய சாலையின் குறைபாடுகள் நீக்கப் பட வேண்டும்  அவ்வாறு  ஒரு நிலை ஏற்பட்டால் மீண்டும் இந்த வைத்தியசாலைக்கு  நான் வருவதற்கு தடை ஏதும் இருக்காது என  தெரிவித்ததுடன் வைத்தியர்கள் ஏனையவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இவ்வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையை போக்கவேண்டும் .

சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் தனக்கு உதவிக்கடமைகள்   புரிந்த வைத்தியர்கள்,தாதியர்கள்,ஊழியர்
கள் உட்பட 30 பேருக்கு  பரிசு வழங்கி கௌரவித்தார் . அத்துடன் அவரது    சேவையை  பாராட்டி நினைவு சின்னம் வழங்கி வைக்கப் பட்டது. இதேவேளை சத்திர சிகிச்சை நிபுணர் சமீம்  சம்மாந்துறை வைத்திய சாலையில் நூலகம் ஒன்றை உருவாக்கும் வகையில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களை வைத்திய அதியட்சகரிடம் வழங்கி வைத்தார்.
 

கருத்துரையிடுக

 
Top