வெற்றிலை சாப்பிட்டு பொது இடங்களில் துப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றாடல் சட்டத்தின் கீழ் அத்தகைய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து தண்டம் அறவிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பொது இடங்களில் வெற்றிலை சாப்பிட்டு துப்புவதால் சூழல் மாசடைவதோடு பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. இதே வேளை பொது இடங் களிலும் வீதியிலும் மாடுகளை விடுவோருக்கு எதிராகவும் நடவடி க்கை எடுக்கப்பட உள்ளதோடு வீதி யோரம் வாகனம் கழுவுவது, நெல் காய வைப்பது என்பனவும் தண்ட னைக்குரிய குற்றங்கள் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top