மருதமுனை மானியங்கள் சமூக சேவைகளுக்கான  வாரியம் (AGASS )அமைப்பினால் வருடா வருடம் நடாத்தப்படும் சமயங்களின் ஊடாக சமாதானமும் ஒற்றுமையும் எனும் தலைப்பில் இடம்பெறும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை  மருதமுனை கலாசார  மத்திய நிலையத்தில்  அமைப்பின் நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி I.L.M. றமீஸ்   தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது பாராழுமன்ற உறுப்பினர் P.H. பியசேன, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W. கப்பார், மற்றும் சமயப்பெரியார்கள், கல்விமான்கள், கோயில் பிரமுகர்கள் என  பலரும் பங்ககுபற்றினர். 

இந்நிகழ்வில் மௌலவி. N.G. கமால், கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன  தேரர் ஆகியோர் சமய நல்லிணக்க உரை நிகழ்த்தினர் .   அமைப்பின் நிர்வாக உறுப்பினர் M.B. பவ்க் இனால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
கருத்துரையிடுக

 
Top