எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கல்முனையின் வரலாற்றில் கல்விச் சேவையில் உன்னதமான சேவைகளை கடந்த 42 வருடங்களாக ஆற்றி சிறந்த சமூகத்தையும், நல்ல கலாசாரத்தையும் உறுவாக்கிய பெறுமையுடன்  ஓய்வு பெறகிறார் ஆதிபர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.பரீத். அவர்கள்.

கிழக்கிற்கு பெறுமை பெற்றுத்தந்த கல்முனை மாநகரில் 1954.07.07ல் அப்துல் மஜீட், சபுறா உம்மா தம்பதியினர்களுக்கு ஐந்தாவது பிள்ளையாக முஹம்மட் பரீத்   பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை கல்முனை அல் - அஸ்ஹர் வித்தியாலயத்திலும் பின் உயர் கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லூரியிலும் கற்றார்.
 
தான் ஸாஹிராக் கல்லூரியில்  உயர்கல்வியைக் கற்றுக்  கொண்டிருக்கும்   போது தனது 18வது வயதில் ஆசிரியர் நியமனத்தைப் பெற்றார்..

1972.10.02ல் முதாலாவது ஆசிரியர் நியமனம் பெற்று குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய கல்வி வலயத்தில் பண்டுவஸ் நுவர கல்விக் கோட்டத்திலுள்ள மெடிக்கே மிட்டியாலய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது கற்பித்தல் பணியைத் தொடர்ந்தார்.

1972.10.02ல் தனது ஆசிரியர் தொழிலுக்குள் பிரவேசித்த இவர் அப்பாடசாலையில் 1975.01.07 வரை கடமையாற்றிய பின்னர் 1975.01.08 முதல்  1976.12.31 வரை யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக வெளியேரினார்.

19977.01.01ல் தான் கல்வி கற்ற கல்முனை ஸாஹிராவிற்கு இடமாற்றம் பெற்று பொறுப்புக்களை கையேற்ற நாள் முதல் 1991.01.14 வரை தான் கற்ற பாடசாலையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி பாடசாலையின் புகழை ஓங்கச் செய்தார்.

இவ்வாசிரியரின் சிறந்த சேவைகளை கண்ணுற்ற பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.இப்றாஹிம் விஷேட வகுப்பொன்றையும் இவ்வாசிரியரின் பெறுப்பில் ஒப்படைத்தார். அவ்வகுப்பிலுள்ள மாணவர்களை திறம்பட   பரீட்சைக்கு பயிற்றுவித்ததன் விளைவினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் வரலாற்றில் முதற் தடவையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் பரீட்சை எழுதிய மாணவன் ஒருவன் அனைத்துப்பாடங்களிலும் அதிகூடிய திறமைச் சித்தியான "8 D" சித்தியை எய்தி பாடசாலையின் புகழை தேசிய ரீதியில் ஓங்கச் செய்தார். இப்பெறுமையும் இவ்வாசிரியரையே சாரும்.

1989.06.01ல் அதிபர் தரம் இரண்டிற்காக நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் 1991.01.14ல் கல்முனை கல்வியின் இரு கண்களான ஸாஹிராக் கல்லூரியிலிருந்து  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

மஹ்மூத் மகளிர் கல்லுரியில் 1991.01.15 முதல் 2002.02.21 வரை தரம் 11 மற்றும் உயர் தரப் பிரிவுகளுக்கு பகுதித் தலைவராகவும், உதவி அதிபராகவும் பின் பிரதி அதிபராகவும் சிறந்த முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் 1994.06.01ல் அதிபர் தரம் ஒன்றுக்கான பதவி உயர்வும் கிடைத்தது.

 இக்கால கட்டத்தில்தான் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் வெற்றிடம் ஏற்பட்டது. இதை நிபர்த்தி செய்வதற்காக கல்முனை கல்விக்காரியாலய உயர் அதிகாரிகள் தொடக்கம் ஊர் முக்கியஸ்த்தர்கள், பாடசாலை கல்விச் சமூகம் போன்றவர்களின் வேண்டுகோளையும், அழைப்பையும் ஏற்று 2002.02.22ல் இப்பாடசாலையின் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

தரம் 09ஆம் வகுப்பு வரையிருந்த இப்பாடசாலையை தரம்11 மற்றும் உயர்தர கலைப் பிரிவு வகுப்புகளை வைத்து இப்பாடசாலையின் தரத்தை "1C" பாடசாலையாக  தரம் உயர்த்தியதோடு இவ்வதிபரின் வருகையின் பின் இப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுடன் இப்பாடசாலையின் முன்னற்றத்திற்காக அரிய பல சேவைகளைச் செய்த அதிபரவர்கள் 2014.06.30 அன்று பாடசாலையின் பொறுப்புக்களை பிரதி அதிபராக இவ்வதிபருக்கு தோழாடு தோல் நின்று உழைத்த யு.எல்.எம்.அமீனிடம் ஒப்படைத்து விட்டு 2014.07.01 முதல் ஓய்வு பெற்றார்.

கருத்துரையிடுக

 
Top