வெளிநாட்டில் இருந்து வந்த தமிழ் பெண்ணிடம்  வெளிநாட்டு தங்கம் வாங்குவதாக கூறி நகைகளை அபகரித்துக் கொண்டு இருவர் தப்பிச் சென்ற சம்பவம் இன்று மாலை 08.06.2014 கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக குறித்த பெண் கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்துள்ளதாக கல்முனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெரிய நீலாவணை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடொன்றில்  வேலைவாய்ப்புக்கு சென்று நாடு திரும்பியுள்ளார். இவரது வீட்டுக்கு இன்று மாலை மோட்டார் சைக்களில்  சென்ற இருவர் வெளிநாட்டு தங்கம் கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு வந்துள்ளோம் எனக் கூறி உங்களிடம் ஆபரணங்கள் இருந்தால் தருமாறு கூறியுள்ளனர். இவர்களின் கதைக்கு ஏமாந்த அப்பெண் தனது தங்க சங்கிலி ஒன்றை அவர்களிடம் காண்பிதுள்ளார்  சங்கிலியை வாங்கி பார்வையிட்டவர் வெளியே மோட்டார் சைக்களில்  நின்றவருடன் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றுள்ளார்கள் .

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்ததையடுத்து  கல்முனை பொலிஸ் பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .இன்னும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை என போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top