ஏ.பி.எம்.அஸ்ஹர்

தேசிய சமாதான பேரவையினால்ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாள் வதிவிட செயலமர்வு நேற்று  நிறைவு பெற்றது.

கொழும்பு ஹெக்டர்கொப்பேகடுவ பயிற்சி நிலையத்தில் ஊடகமும் அறிக்கைப்படுத்தலும் மற்றும் கவனத்தின் முன்வைத்தல் எனும்தொனிப்பொருளில்இப்பயிற்சி நெறிஇடம்பெற்றது.

தேசிய சமாதான பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற மாவட்ட சர்வ சமய குழுக்களின் பிரதிநிதிகளுக்காக இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் 8மாவட்டங்களிலிருந்த 60 க்கும் மேற்பட்ட மாவட்ட சர்வ சமய குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய சமாதான பேரவையின் செயற்திட்ட இணைப்பாளர் சமன்செனவிரட்ன பிரபல ஊடகவியலாளர் சீ.தொடாவத்த புஷ்பா ரஞ்சனிஆகியோர் வளவாளர்களாகக்கலந்து கொண்டனர்Post a Comment

 
Top