மருதமுனை பிராந்திய வைத்திய சாலை விடுதியில்  இரு வைத்தியர்களின்  இரண்டு கை தொலைபேசிகளை களவாடியவர் கல்முனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று  ஆதார வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர்  Dr .ஜெமீல் மற்றும் அவரது மனைவி Dr .ஷாமிலா  ஆகியோரின் 02 ஐ போன் களே   மருதமுனை வைத்திய சாலை அவர்கள் தங்கியிருந்த விடுதியில் வைத்து காணாமல் போனது.

சம்பவம் தொடர்பாக வைத்தியர்களால் கல்முனை போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டதயடுத்து சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்டு  கல்முனை நீதிவான் நீமன்றில்  நேற்று முன்னிலைப் படுத்திய போது ஐவர் விடுதலை செய்யப்பட்டு  ஒருவர்  எதிர்வரும் 16 ஆன் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளார் . இவரிடமிருந்தே   பெறுமதியான போன்கள்  இரண்டும் கைப்பற்றப் பட்டு வைத்தியர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top