கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் “செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” நடாத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாண அமைச்சு இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியூள்ளது.
யூத்தம்இசுனாமி போன்ற அனர்த்தங்களினால் உடல்இஉள பாதிப்புக்குள்ளான சிறுவர்களின் தேகாரோக்கியத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் இந்த “செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா”  விசேட செயற்பாடு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நடாத்தப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் வலியூறுத்தி சகல வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த விசேட திட்டத்துக்கென கல்வி அமைச்சினால் விளையாட்டு ஆசிரியர்கள் வலயத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வளவாளர்களாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 64 பாடசாலைகளில் முதலாவது “செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” நற்பிட்டிமுனை கமு/லாபீர் வித்தியலயத்தில் வெள்ளிக்கிழமை(06) மாலை நடை பெற்றது. அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரிஸ் தலைமையில் நடை பெற்ற விழாவில் தேகப் பயிற்சி கண்காட்சி உட்பட சிறுவர்களுக்கான 25 போட்டி நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.
“செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முஸ்லிம் பிரிவூ கோட்டக் கல்விப் பணிப்பாளர்  எஸ்.எம்.ஏ.ஜஃபர் கலந்து கொண்டு சிறப்பித்தார்இ உதவிக்கல்விப்பணிப்பாளர் அப்துல் சத்தார்இ “செயற்பட்டு மகிழ்வோம் சிறுவர் விளையாட்டு விழா” வளவாளர் எச்.நைரோஸ்கான் உட்பட அதிபர்கள் பிரதி அதிபர்கள்இஆசிரியர்கள்இ பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்இபழைய மாணவர்கள் பெற்றௌர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top