கல்முனை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேச செயலகங்கள் ஒன்றிணைக்கப்படவூள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன

இது குறித்து பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.வி.அபயகோன் தெரிவித்தார்.
இரண்டு பிரதேச செயலகங்களையூம் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஒரு குழுவினரும்இ தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என மற்றுமொரு குழுவினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சின் செயலாளர் கூறினார்
இதேவேளைஇ தமிழ் பிரதேசவாதிகளால் 1989ஆம் ஆண்டு கட்டாயத்தின் பேரில் உருவாக்கப்பட்ட தமிழ் பிரதேச செயலகம்இ கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவருவதுடன் நாட்டின் எவ்விடத்திலும் செயற்பாடில்லாமல் கல்முனையில் மாத்திரம் இவ்வாறான செயலகம் இயங்குவதை தடை செய்ய வேண்டும் என அண்மையில் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கை கல்முனை – 04இ பள்ளி வீதியை சேர்ந்த ஏ.எம். நஸீர் என்பவரினால் பாராளுமன்ற குறைகேள் அதிகாரி எல்.பி.திஸ்ஸ ஏக்கநாயக்கவிடம் கடிதம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த பெப்ரவரி 2ஆம் திகதியிட்ட கடிதமொன்று ஏ.எம். நஸீரினால் பாராளுமன்ற குறைகேள் அதிகாரி எல்.பி.திஸ்ஸ ஏக்கநாயக்கவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கோரிக்கைக்கான பரிந்துரையினை மேற்கொள்ளுமாறு தெரிவித்து கடந்த மார்ச் 14ஆம் திகதி பாராளுமன்ற குறைகேள் அதிகாரி எல்.பி.திஸ்ஸ ஏக்கநாயக்கவினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் பிரதியொன்று முறைப்பாட்டாளரான ஏ.எம். நஸீரிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தினை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஆகியோருக்கு ஏ.எம். நஸீரினால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 21ஆம் திகதியிடப்பட்ட இந்த கடித்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் HAF2/DELCOM/11/2009ஆம் இலக்க சுற்று நிரூபத்திற்கு அமைவாகவூம் 1679/40ஆம் இலக்க 2010.11.10ஆம் திகதி அரச வர்த்தமானியின் நீதி நிர்வாகம் தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கை அறிவூறுத்தலின் படி
1. பிரதேச செயலகத்தை தான்தோன்றித்தனமாக தமிழ்இ முஸ்லிம் பிரிவூ என்று நாமம் சூட்டி செயற்படுவது ஒரு தேசத்துரோகமாகும்
2. 50 -75 கிராம சேவக பிரிவூகளுக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற ஒரு திட்ட வரைபு மீறப்பட்டுள்ளது
3. ஒரு பிரதேச செயலகத்தை கூறாக்கி உத்தியோகபூர்வமாக இனவாதத்திற்கு தடம்பதிக்க இடம்கொடுத்தது
இது தொடர்பில் யூத்தம் முடிவூற்றும் இது கால வரை
1. மாவட்ட செயலாளர் செயற்படாமல் தனது கடமையை உதாசீனம் செய்தது
2. கிழக்கு மாகாண ஆளுநர்  சபை தங்களது குறித்த பிரதேச செயலகத்தின் செயற்பாட்டில் கவனம் செலுத்தாமை
3. ஒரு பிரதேச செயலகத்திற்கான உத்தியோகத்தர் முதல் சகல பணிச் செலவூகளும் இரட்டிப்பாக வெவ்வேறாக வழங்கப்படுவது
பிரிவினைவாதிகளின் தான்தோற்றித்தனமான செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கியமையினால் பின்வரும் விளைவூகள் உருவாகலாம்
1. தேசத்தின் எந்தப் பிரதேசத்திலும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பிரதேச செயலகம் உருவாக வாய்ப்புண்டு 
2. ஏனைய பிரதேச மக்களை இனத்தின் பெயரால் பிரதேச செயலகத்தை உருவாக்க முயற்சிக்க உந்துதல்
3. தேசத்தின் நாலா புறங்களிலும் பிரிவினை உருவாக்கும் முயற்சி
இதனால்
1. 58 கிராம சேவகர் பிரிவூகளைக் கொண்ட கல்முனை பிரசே செயலம் ஒன்றாக இருக்க வேண்டும்
2. 2கல்முனை பிரதேச செயலகத்தை தமிழ் மற்றும் முஸ்லிம் என பிரித்து நாமமிட்டு அடையாளப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்ஈடிசஇஅங்கீகாரமில்லாமல் தமிழ் பிரதேச செயலகம் என தலைப்புக் கடிதங்கைள கொண்டு செயற்படுவதையூம் முத்தரைகள் பாவிப்பதையூம் தடை செய்வதுடன் தான்தோன்றித்தனமாக தேசத்தின் நிர்வாகத்தினை மேற்கொள்ளும் முயற்சியாளருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரதேச செயலகங்களுக்கு பொறுப்பான உதவி செயலாளர் எச்.ஏ.எஸ்.சஜந்தவினால் குறித்த முறைப்பாட்டாளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்முனை தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய பிரதேச செயலகங்கள் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செயற்பாட்டின் ஒரு அம்சமாகவே கல்முனைக்கு பிரதேச செயலாளராக மொகான் விக்ரம ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை பிரதேச செயலகத்தின் ஒரு பகுதி 1989ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தமிழ் உப பிரதேச செயலாளர் காரியாலம் உருவாக்கப்பட்டது. 
கிழக்கு மாகாண சபையின் உதவியூடன் இந்த காரியாலயத்தின் மூலம் கல்முனை பிரதேச செயகத்திற்குட்பட்ட தமிழர்களுக்கான நிவாரணம் வழங்கல்,மானியக் கொடுப்பனவூ வழங்கல், உபகாரக் கொடுப்பனவூ வழங்கல், திருமணஇ பிறப்பு, இறப்பு பதிவூகள் மற்றும் பரிந்துரைகள்,அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கல் ஆகிய சேவைக் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் காணி மற்றும் நிதி போன்ற விடயங்கள் கல்முனை பிரதேச செயலகம் (முஸ்லிம்) எனப்படும் நிலையான பிரதேச செயலகத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top