(ஏ.பீ.எம்.அஸ்ஹர்)  பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அம்பாரை மாவட்ட அபிவிருத்தி வாரம் எதிர்வரும்  18ஆம்திகதி முதல்25ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.


இது தொடர்பாக அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயலமர்வொன்று இன்று வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கலந்துகொண்டு இது தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.இதே வேளை இவ்வபிவிருத்தி வாரத்தையொட்டி பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.       
இவ் அபிவிருத்திவாரத்தினுள் இவ்வருடத்திற்காக பிரதேசசெயலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் ஆகக்குறைந்தது 25 வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து வெற்றி பெறும் பிரதேச செயலாளர் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மற்றும் கணக்காளர் ஆகிய மூவருக்கும்  வெளிநாட்டுப்புலமைப்பரிசில்களுடன் பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. இதில்பிரதேச செயலாளருக்கு 10ஆயிரம் ரூபாவும் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மற்றும்கணக்காளர் ஆகியோருக்கு 7ஆயிரத்து 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இதில் டீ  சீ.பி  வேலைத்திட்டம் 05 பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட வேலைத்திட்டம்05 ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்10  கிராமிய பாடசாலைகள் அபிவிருத்திதிட்டம் 02 திவிநெகும 02 ஏனைய அபிவிருத்திட்டங்கள்01 எனும்  ரீதியில் வேலைத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அனவர்டீன் இங்கு குறிப்பிட்டார்

இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைடீன் பொறியியலாளர் ஐ.எம்.றாஸிக் உட்பட பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சிமன்றங்களின் தலைவர்கள்
திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர்கள் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மிருக வைத்தியர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள்மற்றும் பிரதேச செயலக பிரதேசசபைகளின் தொழில்நுட்பஉத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top