நோன்பு காலத்தை முன்னிட்டு அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம்களுக் கான விசேட விடுமுறை மற்றும் சமய வழிபாட்டு நேரங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
ரமழான் பண்டிகைக்கு 14 நாட்களுக்கு முன்பதாக முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முற்பணம் வழங்கப்படுவது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபேகோனினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலை வர்கள் மற்றும் அரச செயலகங்களின் பிரதானி களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.
இதற்கிணங்க ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு தொழுகை மற்றும் மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு விசேட விடுமுறைக்கான அனுமதியை பெற்றுக்கொடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டு ள்ளார்.
இம்முறை ரமழான் நோன்பு காலம் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை மாதம் 29ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்காலப் பகுதியில் முஸ்லிம் அரச அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளக் கூடியதாகவே இந்த ஒழுங்குகள் செய்து கொடுக்கப் படவுள்ளன.
இதன்படி இக்காலப் பகுதியில் மு.ப. 3.30 மணி முதல் 6.00 மணி வரையும் பிற்பகல் 3.15 முதல் பி.ப. 4.15 மணிவரையும், பிற்பகல் 6 மணி முதல் பிற்பகல் 7 மணி வரையும் பிற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 10.30 மணி வரையும் மத வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும் எனவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் விசேட விடுமுறையை அங்கீகரிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top