ஏ.பி.எம்.அஸ்ஹர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர்  அளுத்கம தர்கா நகர் பேருவளைமற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால்தாக்கப்பட்டு தற்போது நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட கல்முனை ஜமாஅத் அன்ஸாரிஸுன்னதில்முஹம்மதிய்யா ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக கல்முனைப்பிரதேச வாழ் மக்களின் பங்களிப்பு பெரிதும்எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்முதற்கட்டமாக நாளை ஜும்ஆத்தொழுகைக்காக தைக்கா வீதியில அமைந்துள்ள மஸ்ஜித் முஹம்மதிக்கு  வரும் அனைத்து சகோதரர்களும் பாதிக்கப்பட்டு  பல்வேறுவகையிலும் சொல்லொன்னாத்துயரங்களை அனுபவித்து வரும் நமது ஈமானிய சொந்தங்களுக்கு உதவ வேண்டும் இதற்குத்தயாராக வருமாறும் தமக்கு விரும்பிய அளவு பண உதவியை அள்ளி வழங்குமாறும் இப்பள்ளிவாயல் நிருவாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Post a Comment

 
Top