கல்முனை கடலில் குளித்த  தமிழ் வாலிபன்  கடலில் மூழ்கிய சம்பவம்   இன்று பகல் இடம் பெற்றுள்ளது . 
கல்முனை பாண்டிருப்பை  சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் மற்றும் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை  சேர்ந்த   இரு  தமிழ் சகோதர்களும் கல்முனை  ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வேளை  இளைய சகோதரன் லோகநாதன்  ஜெனி லோசன் (20) கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் . காணாமல் போன சகோதரனை  தேடிய  மூத்த சகோதரனான  லோகநாதன் தேவநேசன் (21) என்பவரும்  பாதிரியாரும்  கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்துள்ளனர் .

காணாமல் போனவரை  கல்முனை பொலிசாரும் ,கடற் படையினரும்  மற்றும் மீனவர்களும் தேடுதல் நடத்துகின்றனர் . இதுவரையில்  அவர் சடலமாகவோ உயிருடனோ கண்டு பிடிக்கப் படவில்லை . தொடர்ந்தும்  தேடுதல்  இடம் பெறுகிறது .
இதே வேளை  நடந்த சம்பவத்தை  வீட்ட்க்கு  சென்ற மூத்த சகோதரன் லோகநாதன் தேவநேசன் (21)   தனது தாயுடன் விபரிக்கையில் மயக்கமடைந்து  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

கருத்துரையிடுக

 
Top