சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பொதுச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட  பாவனைக்குதவாத  பெருந்தொகையான கருவாடு  பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

இன்று  சனிக்கிழமை காலை மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம்  தலைமையிலான சுகாதராப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பை அடுத்தே  பாவனைக்குதவாத  பெருந்தொகையான கருவாடு  கைப்பற்றப்பட்டுள்ளது . அத்துடன் பாவனைக்குதவாத பழங்கள்  பலவும் கைப்பற்றப் பட்டதாக மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார் .

இதே வேளை  சுகாதாரத்துக்கு பாதகமான முறையில் அமைந்திருந்த உணவகம் ஒன்று  சீல் வைக்கப் பட்டுள்ளது. அந்த உணவகத்தை சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக மீள அமைத்து சுகாதாரப் பரிசோதகர்கள்  திருப்தியடையும் பட்சத்தில் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top