கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து நிலவிய வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இவர், உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இனியபாரதி போட்டியிட்டிருந்தார்.

கருத்துரையிடுக

 
Top