முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ)ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தலைப்பிலான கலந்துரையாடலொன்று நாளை   (27) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் பி.ப.3.30மணிக்கு  ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் துஆப்பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

இதில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் சமூக உணர்வுள்ள அனைவரையும் கலந்து  கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

 
Top