கடந்த சில நாட்களாக அளுத்கம தர்கா நகர் பேருவளை மற்றும் பதுளை போன்ற இடங்களில் பொது பலசேனா அமைப்பினரால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களைக் கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ள்ப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கு முகமாக கல்முனை பிரதேசத்தில் இன்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது 

கல்முனையில் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்படடிருந்தது கல்முனை பிரதேசத்தில் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அரச தனியார் வங்கிகளில் பெரும்பாலானவை இயங்கவில்லை அத்துடன் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. கல்முனை பஸாரும் இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது. கல்முனை அம்பாரை வீதியில் போக்குவரத்துக்களும் பெரிதாப இடம்பெறவில்லை.கருத்துரையிடுக

 
Top