பொருளாதார அமைச்சின் வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி திணைக்களத்தினால் சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த நாட்டை கட்டி எழுப்பி போதைப் பொருளை ஒழித்து  வாழ்வினை எழுச்சி பெற செய்வோம் என்ற தொனிப்பொருளில்  சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு  மே 31 தொடக்கம் ஜூன் 15 இன்றுவரை அனுஸ்டிக்கப் பட்டது .

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சர்வதேச புகைத்தல்,மது எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை (15) பிரதேச செயலாளர் கே.லவநாதன்  தலைமையில் இடம் பெற்றது. பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி  அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உட்பட  மகளிர் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் கல்முனை பொலிஸ்  நிலையம் வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது . ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Post a Comment

 
Top