(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
 பொருளாதார அமைச்சின் அனுசரனையில் வெனிசுலா அரசாங்கத்தின் நிதி உதவியில் சாய்ந்தமருது வெளிவோரியன் கிராமத்தில் பயனாளிகள் மூலம் கட்டப்பட்ட 200 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை முடிவுறுத்துவதற்கான நிகழ்வொன்று  இடம் பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு நீல் டி அல்விஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை பிரதேச செயலாளர் மொகான் விக்கிரமராச்சி, அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா, சாய்ந்தமருது  பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா, உலமா சபைத்தலைவர் சட்டத்தரணி என்.எம்.முஜிப், சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.ஜெமீல், மாவட்ட, பிரதேச செயலகத்தினதும், தேசிய வீடமைப்பு அதிகார சபையினதும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஊர்பிரமுகர்கள் உட்பட சுனாமி வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் குழுவினரும் கலந்த கொண்டனர்.


இவ் வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்கு பெரிதும் உதவிய மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மான்புமிகு பஷீல் ராஜபக்க்ஷ மற்றும் நிதியமைச்சின் செயலாளருக்கும் நன்றி பாராட்டியதுடன் 200 வீட்டுத்திட்ட பயனாளிகள் அமைப்பினரால் அம்பாறை மாட்ட அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயளாலருக்கும்   பெண்ணாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவித்ததோடு இத்திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த நிருவாக உத்தியோகத்தரும் கௌரவிக்கப்ட்டனர்.
இதன் போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் வெளியிடப்படும் சாந்தம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.


சுனாமியினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்காக இப்பிரதேச செயலாளரின் காலத்தில் பொருளாதார அமைச்சின் அனுசரனையில் வெனிசு நாட்டின் நிதி உதவியில் 199 வீடுகளும், கடற்றொழில் நீரியல் வள அமைச்சின் அனுசரனையில் இபாட் அமைப்பு 130 வீடுகளும்,எஹட் அமைப்பினால் 60 வீடுகளும், வளத்தாப்பிட்டியில் ஐசீஆர்சியினால் 122 வீடுகள் என இது வரை 711 வீடுகள் கட்டப்பட்டு சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் 200 வீடுகளை அமைப்பதற்கு 110  மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. என்பத குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

 
Top