அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மாடுகளுக்கு  கால்வாய்  தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தொற்று ஏற்படாத பிரதேசங்களில்  உள்ள மாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களங்கள் முன்னெடுக்கும் எனவும்  மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி Dr .எம்.சி.எம்.ஜுனைட்  தெரிவித்துள்ளார் .

அம்பாறை மாவட்டத்தில் தெஹியதகண்டி,மகஓயா ,உகன,திருக்கோயில் காரைதீவு  ஆகிய  பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரதேசங்களில் கால்வாய் தொற்று  ஏற்பட்டிருப்பதாகவும்  தோற்று ஏற்பட்டதன் பின்னர் இதற்கான தடுப்பூசி ஏற்ற முடியாதெனவும் மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கு  இந்நோய் பரவாமல்  இருப்பதற்கு அந்த பிரதேச கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களங்கள் ஊடாக தடுப்பூசி  ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்விடயம் தொடர்பாக மக்கள் எவ்வித பீதியும் கொள்ளதேவயில்லை எனவும் . பால் மற்றும் இறைச்சி என்பவற்றால் பாதிப்புக்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தால் .

கால்வாய்  நோய் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கால் நடை வைத்தியர்களை சந்தித்து  இரண்டாம் தோற்று ஏற்பட்டு  கால் நடைகள் இறப்பு ஏற்படுவதை  தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  பண்ணையாளர்களை மாவட்ட கால் நடை வைத்திய அதிகாரி Dr .எம்.சி.எம்.ஜுனைட்  தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

 
Top