( முஹம்மட் )

விளக்கமறியலில் இருக்கும் ஆசிரியருக்கு எதிராக இதுவரை எது வித ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்காதிருப்பதை கண்டு மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் விசனம். கல்வியதிகாரிகள் ஏன் மௌனம்.

மாணவர்களை பிழையாக வழி நடாத்தி விளக்கமறியலில் இருக்கும் ஆசிரியருக்கு இதுவரை எது வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காதிருப்பதைக் கண்டு குறித்த அப்பாடசாலையில் கல்வி கற்கும்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் அச்சத்தில் பாடசாலை நிருவாகம், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் கல்வியதிகாரிகள் மீது விசனம் தெரிவித்தனர்.

கல்முனையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை பிழையாக வழி நடாத்தி அம்மாணவர்கள் மூலம் கையடக்கத் தொலை பேசி ஊடாக அதே பாடசாலை ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியை ஒருவரை தாகாத வார்த்தைகளால் தூசித்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை அவரின் குடும்பத்தினரின் உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியர் கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் பணிப்பில் கடந்த 2014.05.28ல் கைது செய்து மறு நாள்  கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர் வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற  நீதிபதி அந்தேனிப்பிள்ளை ஜுட்சன் உத்தரவிட்டதையடுத்து குறித்த ஆசிரியர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்   தெரிவிக்கையில்…………………………………………..

சம்மந்தப்பட்ட இவ்வசிரியர் இப்பாடசாலையில் 17 வருடங்களுக்கு மேலாக கடமையற்றி வருகிறார். இவரை ஏன் இவ்வளவு காலமும் இப்பாடசாலையிலிருந்து  பொறுப்புள்ள கல்வியதிகாரிகள் இடமாற்றம் செய்யவில்லை என்பது புரியவில்லை.   
  
மாணவர்களை பிழையாக நடாத்திய விடயம் பிடிபட்டதும் இவ்வாசிரியர் கூறி இருந்தார் பொலிஸில் உண்மைகளைச் சொன்னால் உங்களை O/ L பரீட்சை எழுத விடமாட்டேன், மாறி உங்கள் மீது பழியைப் போடுவேன்.என்று.

இதே வேளையில் இவ்வாசிரியரின் நெருங்கிய நன்பரான அதே பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் கூறினாராம் உண்மைகளைச் சென்னால் உன்னை தூக்கியடிப்பேன் என்று.   

இவ்வாறு நடந்து அப்பாடசாலையின் கல்வியை வீழ்ச்சியடையச் செய்யும் கெட்ட நோக்கோடு நல்லவனைப் போல் நடித்து எங்களையெல்லாம் நம்பவைத்து எங்களுடைய வீடுகளுக்கு வந்து இந்த பாடசாலை உங்கட பிள்ளைக்கு சரிவராது, படிப்பு சரியில்லை, அங்க இருக்கிறவர்களுக்கு  படிப்பிக்கத் தெரியாது, நிருவாகத்தை பிழையாகச் செய்கிறார்கள் நான் பதிவை வெட்ட ஏற்பாடு செய்யறேன். என்று ஒரு ஆசிரியர் சொன்னால் யார்தான் நம்பமாட்டபார்கள்.

இது இப்படி இருக்க ஏன் கல்முனை வலயக்கல்விக் காரியாலயம் உட்பட கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மற்றும் கல்வியமைச்சில் உள்ளவர்கள் ஏன் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவரைப்பற்றி எல்லா அதிகாரிகளுக்கம் தெரியும்.

சிலபஸ் முடிப்பது பற்றி எங்கட பிள்ளைகள் கேட்டால் அது பிரச்சினையில்லை நான் புள்ளி போடுவேன் என்பாராம். என்றதுடன் குறைந்தது இவரை இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் எங்கள் பிள்ளைகள் நிம்மதியான அங்கு படிப்பார்கள்.

 இவ்வாசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு எங்களுக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு ஆறுதலும் நம்பிக்கையும் நீதி மன்றம்தான்.
ஏனென்றால் இனி பாடசாலை நிருவாகத்தையோ, பாடசாலை அபிவிருத்திக் குழுவையோ அலலது கல்வியதிகாரிகளையோ நம்பத் தேவையில்லை.

இதே வேளையில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில்…………………….

குறித்த ஆசிரியர் பிணையில் மீண்டும் வரும் போது இதே பாடசாலையில்தான் கற்பிக்க வேண்டி ஏற்படும். இங்குதான் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் பணியாற்றுகின்றார்.
எனவே அவர் மீண்டும் இப்பாடசாலைக்கு வருவதானது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியைக்கும் பாரிய அச்சுருத்தலாகவும், மன அழுத்தங்களையும் ஏற்படுத்துவதாக அமையும். எனவே அவரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதே பொருத்தமானதாகும்.

இதற்கு நாங்கள் யாரையும் நம்ப முடியாது. நீதி மன்றத்தைத் தவிர. என பாதிக்கப்பட்ட அப்பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்தார்.  

கருத்துரையிடுக

 
Top