கல்முனை "நெனசல" அறிவகத்தின் 5 வது பட்டமளிப்பு விழவும், இணையத்தள அங்குரார்ப்பன நிகழ்வும், கல்முனை ஸபா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை "நெனசல" அறிவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா கான் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு தென் கிழக்கு பல்கலைக் கழக பொறியியல் பீட, பீடாதிபதி கலாநிதி. எஸ்.எம்.ஜுனைதீன் பிரதம அதிதியாகவும், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் கௌரவ அதிதியாகவும், 
கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்துக்குமான சபையின் செயலாளர் சட்டத்தரணி. யூ.எம்.நிஸார், கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நதீர் மௌலவி ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், தென்கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர்களான எம்.எச்.எம்.நிஜாம், எஸ்.எல்.கலீம், சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.கலையரசன் உள்ளிட்ட கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்துக்குமான சபையின் உயர்பீட உறுப்பினர்கள் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

இங்கு கல்முனை நெனசல" அறிவகத்தில் பல்துறைகளிலும் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த 750 மாணவ, மாணவிகள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

இதன்போது கல்முனை நெனசல" அறிவகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர்அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
Top