மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவையொட்டி  ஏற்பாடு செய்யப்பட்ட  கிழக்கு மாகாணம் தழுவிய  வாகன பவனி  இன்று(02) பகல் கல்முனையை வந்தடைந்தது .

கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்த ராஜாவின் தலைமையில் வருகை தந்த குழுவினரை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் தலைமையிலான  ஆசிரியர்கள் ,பழைய மாணவர்கள்  பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்கள் கல்முனை மக்கள் ச்வங்கி சந்தியில் இருந்து மலர் மாலை அணிவித்து  பேண்ட் இசை முழங்க உவெஸ்லி பாடசாலை வரை வரவேற்றனர் 

பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் இடம் பெற்ற  கூட்டத்தை அடுத்து  அங்கு தாக சாந்தி வழங்கப் பட்டு  ஊர்தியில் ஒப்பமிடும் நிகழ்வும் இடம்பெற்றது.. 


கருத்துரையிடுக

 
Top