அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் புலனாய்வு விசாரணைகளை நடத்தி, சூத்திரதாரிகளை சட்டத்தில் முன்நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மொத்தம் 20 பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனவாம்! 
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
 ஏற்கனவே கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் ஐந்து தனித் தனி விசாரணைக் குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தன. இந்த ஐந்து அணிக்கு மேலதிகமாக தற்போது மேலும் 15 அணிகளை பொலிஸ் தலைமையகம் களத்தில் இறக்கியுள்ளது. 
அதேசமயம் மேற்படி வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரிகளை அடையாளம் காணக்கூடிய படங்கள், வீடியோ கிளிப்புக்களை யாரேனும் வைத்திருந்தால் அவற்றைத் தந்துதவுமாறும் பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top