பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பதனை இன்று வெள்ளிக்கிழமை ஆளும் கட்சி தீர்மானிக்கும் என சிங்கள பத்திரிகையொன்று ö சய்தி வெளியிட்டுள்ளது.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இன்று இரவு 7 மணிக்கு  ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசப்படவுள்ளன.  எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை நடத்துவதா என்பது குறித்தும் எப்போது நடத்துவது என்பது குறித்தும் ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

 
Top