நோய்த்தாக்கத்தின் எதிரொலி
சிறுவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசாக்கள் இல்லை
சவூதி அரேபி யாவில் தீவிரமடை ந்து வரும் மேர்ஸ் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹஜ், உம்ரா கடமைகளுக்கு சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இது தவிர ஏனைய வகை நோய்களுக்கான தடுப்பு மருந்தை பெறாதவர்களுக்கும் விசாக்களை வழங்குவதில்லை என்றும் மக்கா தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் ஹஜ், உம்ரா குழுவின் தலைவர் சாத்அல்குரைஸி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் தீவிர மடைந்திருக்கும் மேர்ஸ் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக பல்வேறு ஹஜ் மற்றும் உம்ரா முகவர்களும் சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட யாத்திரிகர்களின் விசா விண்ணப்பங்களை ஏற்பதை நிறுத்தியுள்ளன.
சவூதியின் மேற்கு மாகாணங்கள் குறிப்பாக மக்கா, மதீனா மற்றும் ஜித்தா நகரங்களில் மேர்ஸ் வைரஸ் பரவியிருக்கும் நிலையில் பல ஹஜ் மற்றும் உம்ரா சேவை வழங்குனர்களும் வயதான யாத்திரிகர்களை தவிர்த்து வருகின்றனர். எனினும் இது குறித்து சவூதி அரசு இதுவரை உத்தியோக பூர்வ அறிவிப்பு எதனையும் வெளி யிடவில்லை.
புனித ரமழான் மாதத்திற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வைரஸ் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ள சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு கூடிய யாத்திரிகர்கள் ஆபத்து நீங்கும் வரை எதிர்வரும் காலத்தில் யாத்திரை திட்டத்தினை ஒத்திவைத்துக் கொள்ளும்படி சவூதியின் இடைக்கால சுகாதார அமைச் சராக செயற்படும் அப்துல் பக்கிஹ் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தார். யாத்திரிகளர்களிடம் வைரஸ் பரவும் அபாயம் காரணமாக உம்ரா மற்றும் ஹஜ் சேவை முகவர்கள் தமது வாடிக்கையாளர் களை அறிவுறுத்த விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top