மத்திய  சுற்றாடல் அதிகார சபையினால் வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற  " தேசிய பசுமை " விருதுக்கான  2013/2014 போட்டித்தொடரில்  கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி கமு/அல் -அஷ்ரப் மகா வித்தியாலயத்துக்கு  வெண்கல விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த 2010/2012 ஆம் வருடமும் இப்பாடசாலை திறமை விருதினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக இவ்விருதினை பெற்ற இப் பாடசாலை  அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீனை பாராட்டும் நிகழ்வு  இன்று (13) கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தில் நடை பெற்றது .

வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதிக் கல்விப்    பணிப்பாளர்  ஐ.எல்.ஏ.ரஹீம்,கணக்காளர்  எல்.ரீ .சாலிதீன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்கருத்துரையிடுக

 
Top