இலங்கைத்தீவில் சமாதானக்காற்றை சுவாசிப்பதற்கு தங்களது உயிரையும் உடலையும் அர்ப்பணித்த துணிச்சல்மிகு படை வீரர்களை நினைவுகூறும் கிழக்கு மாகாண படைவீரர் கௌரவிப்பு விழா இம் மாதம் 12 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கிழக்க மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரமவின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாவட்ட அரசாங்க அதிபர் ரீ.ரீ.ஆர் டீ. சில்வா, பல்வேறு அரசியல் பிரமுகர்கள்,முப்படை வீரர்கள், உட்பட பலரும் கலந்து கொள்வர்.

கருத்துரையிடுக

 
Top