கடந்த 29.04.2014 அன்று இடம்பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வின்போது அண்மையில் அகற்றப்பட்ட ஜனாதிபதியுடனான முதல்வரின் புகைப்படம் தாங்கிய பதாதையை மீண்டும் காட்சிப்படுத்த வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் கோரிக்கை விடுத்தார்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த   மது முதல்வர்” என தலைப்பிட்டு ஜனாதிபதியுடன் (முன்னாள்) முதல்வர் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது எடுக்கப்பட்டுட்ட  புகைப்படம் தாங்கிய பதாதாதைகளை மாநகரசபை அண்மையில் அகற்றி இருந்தது. 

இதுதொடர்பில் ஜனாதிபதியின் புகைப்படத்தினை அகற்றியுள்ளதாக (முன்னாள்) முதல்வர் பொலிஸில் முறைப்பாடு செய்து அது தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுபட்டிருக்கின்றது.

மேலும் எமது முதல்வர் என பதாதையில் பொறிக்கப்பட்டிருக்கும் (முன்னாள்) முதல்வரின் புகைப்படத்தினை தொடர்ச்சியாக காட்சிப்படுத்துவதில் சாதாரண மக்கள் மத்தியில் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுவந்ததை அவதானித்தே அப்பதாதைகள் அகற்றப்பட்டன என்பதை மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

அகற்றப்பட்ட நாங்கு இடங்களிலும் எமது முதல்வர்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு முதல்வர் ஜனாதிபதியிடமிருந்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தினை மீண்டும் மிகத் துரிதமாக பொருத்துவதற்கு இச்சபை அங்கீகாரம் வழங்கப்படல் வேண்டும் என விடுத்த கோரிக்கையை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

Post a Comment

 
Top