காலம் சென்ற தனது தந்தை ஏ.சி.ஏ. வாஜீட்  அவர்களது நினைவாக  அவரது  புதல்வரான  சத்திர சிகிச்சை நிபுணர்  ஏ.டபிள் யு .எம். சமீம்  நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த  வறிய குடும்பங்களை சேர்ந்த சிறார்களுக்கு  இலவசமாக கத்னா செய்து வைத்தார் .

நற்பிட்டிமுனை  மென்ஸ்  சமூகசேவை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு வறிய  குடும்பங்கள் என அடையாளப் படுத்தப்பட்ட சிறார்களுக்கு  இந்த இலவச கத்னா வைபவம் நேற்று மருதமுனையில் உள்ள வைத்திய நிபுணரின் இல்லத்தில்  நடத்தி வைக்கப் பட்டது.

வறிய குடும்பத்தில் உள்ள ஏழை சிறார்களுக்கு  தனது தந்தையின் நினைவாக இவ்வாறான  பாரிய உதவியை இறைவனுக்காக வேண்டி எமது கிராமத்தில் செய்ய முன் வந்த வைத்திய நிபுணருக்கு நற்பிட்டிமுனை கிராம மக்கள் சார்பில்  மென்ஸ்  சமுக சேவை அமைப்பினர் தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top