இன்று தனது 81ஆவது வயதில் காலடி வைக்கும் முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

1933.05.30இல் கல்முனையில் பிறந்த முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் எமது மண்ணின் அரசியல் வரலாற்றுப் பதிவுகளில் ஒருவாக திகழ்கின்றார்.
1970 களில் இலங்கை பிரதமரான டட்லி சேனநாயக்க அவர்களின் அழைப்பில்பேரில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

1977ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

1977ம் ஆண்டு இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்களை யாழ் மாவட்டத்திற்கான முதலாவது மாவட்ட அமைச்சராக நியமித்தார். யாழ் மாவட்ட அமைச்சராக சுமார் ஒரு வருடம் சேவையாற்றினார்.

பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் சுமார் 12வருடங்கள் சேவை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்இ கப்பல்இ வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் சேவையாற்றினார்கள்.

அரசியலில் இருக்கும் காலங்களில் பல்வேறுபட்ட துறைகளில் மக்களுக்கான சேவைகளையும்இ மார்க்கட்டுகள் புனரமைத்ததோடுஇ நிருவாக ரீதியான கட்டமைப்புக்களை ஏற்படுத்தியதோடு மட்டுல்லாமல்இ பாரியளவிலான பாடசாலை மற்றும் அலுவலக கட்டிடங்கள் மற்றும் நூலகங்களை நிறுவினார்.

பிரதேச வாதம்இஇனவாதங்களுக்கு அப்பால் தனது சேவையில் நீதித் தன்மையை கடைப்பிடித்திருந்தார். 
1994ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் பின்னர் அரசியிலிலிருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர் குவைத் மற்றும் பஹ்றைன் நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் அவர்கள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ வல்ல இறைவனைப் பிராத்திப்போமாக!


ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்

கருத்துரையிடுக

 
Top