சாய்ந்மருது-மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடந்தாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும், க.பொ.த (சா/த) பரீட்iசியில் விஷேட சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இன்று இடம்பெற்றது. 

சாய்ந்மருது-மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுக்களின் தலைவரும் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல் கௌரவ அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் சட்டத்தரணி என்.எம்.எம்.முஜீப், சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.எம்.கபார், இறக்காமம் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் உலமாக்கள், மரைக்காயர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு அதிதிகளினால் நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் விஷேடமாக கடந்தாண்டு பாடசாலை ஆசிரியர்களில் விடுமுறை பெறாத மற்றும் பாடசாலை வகுப்பாசிரியர்கள் தங்களது வகுப்பறைகளை உயிரோட்டமுள்ள வகுப்பறைகளாக அழகுபடுத்தி பராமரிக்கும் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

 
Top