சாய்ந்தமருது தோனா ஆற்றை சுத்தம் செய்து நவீனமயப்படுத்தும் வேலைத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும் துர்நாற்றம் வீசும் நிலையிலும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்து வருகின்ற இத்தோனாவை சுத்தம் செய்து நவீனமயப்படுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் ஏ.எம்.ஜெமீல் அவர்களும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களும் எடுத்துக் கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக இதனை சுத்தப்படுத்தும் முதற்கட்டப் பணிக்காக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர் அவர்களது துரித நடவடிக்கை காரணாமாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் 13 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.இதற்கு மேலதிகமாக தேவைப்படும் நிதியை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்றுள்ளதாக முதல்வர் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
இதன் பிரகாரம் குறித்த இத்தோணாவை சுத்தமாக்கும் பணி இன்று திங்கட்கிழமை (2014-05-05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் உலக சமாதான அமைப்பின் இலங்கைக்கான தூதுவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபையின் சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர், சாய்ந்தமருது பிரதேச கிராம சேவகர்களின் தலைமை அதிகாரி எம்.எஸ்.எம்.நளீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இதனை சுத்தம் செய்து நவீனமயப்படுத்துவதற்கு முன்னின்று உழைக்கும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் உள்ளிட்டோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

 
Top