தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2014ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா, நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்களும், இஸ்லாமிய அறபு கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 107 மாணவர்களும், கலை, கலாசார பீடத்தைச் சேர்ந்த 134 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 33 மாணவர்களும், வியாபார நிருவாக முதுமாணிப் பட்டமாக 09 பேரும், கலாநிதிகளாக இருவரும் என மொத்தம் 443 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர்.

வேந்தர் கலாநிதி அச்சி முகம்மட் இஸாகினால் ஆரம்பித்து வைக்கவுள்ள இந்த நிகழ்வில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top