கிழக்கு மாகாண  சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பேராசிரியர் முருகேசு இராஜேஸ்வரன் கல்முனை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் பாட சாலைகளுக்கு தனது நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ கொப்பி இயந்திரங்களும் ,அச்சு பதிப்பு இயந்திரங்களும் வழங்கி வைத்தார் .

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில் இன்று வலயக்கல்வி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பாண்டிருப்பு விஷ்ணு மகாவித்தியாலயம்,நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகாவித்தியாலயம் ஆகியவற்றுக்கு போட்டோ கொப்பி  இயந்திரங்களும்,கல்முனை கிண்டர் பேக் முன்பள்ளிக்கு கணணி அச்சு இயந்திரமும் மாகாண  சபை உறுப்பினரால் வழங்கி வைக்கப் பட்டன .



குறித்த பாடசாலைகளின் அதிபர்களும்  வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில் வாகனம்,ஏ.சி.எம்.தௌபீக் ,கணக்காளர் எல்.ரீ.சாலிதீன்  ஆகியோரும் கலந்து கொண்டனர் . 

Post a Comment

 
Top