2011ஆம் ஆண்டில் கல்விப் பொது தராதர பரீட்சையில் தோற்றி  கல்விப் பொது தராதர உயர் தர கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப் படும் இரண்டாங்கட்ட புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை  திங்கட் கிழமை மாலை  கல்முனையில் நடை பெறவுள்ளது.

இந்த புலமைப்  பரிசு பெற தகுதி பெற்ற கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட17 பாட சாலைகளில் இருந்து  101 மாணவர்களுக்கு தலா ரூபா ஆறாயிரம்  வழங்கி வைக்கப் படவுள்ளது . கல்முனை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட  103 மாணவர்களுக்கு  ஜனாதிபதி நிதியில் இருந்து 6இலட்சத்து 18ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் இருவர் இதிட்டதிலிருந்து தகுதியின்மை அடைந்துள்ளதனால் 101வருக்குமான  புலமை பரிசு வழங்கும் வைபவம்  நாளை மாலை கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி  மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீல் தலைமையில்  நடை பெறவுள்ள இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு ஒருங்கிணைப்பு குழு தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  இந்த ஜனாதிபதி புலமை பரிசில் நிதியை மாணவர்களுக்கு வழங்கி வைக்கவுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top