கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 07 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் 18வயது வாலிபன் கல்முனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்  அதே கிராமத்தை சேர்ந்த கந்த சாமி நகுலேஸ்வரன் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்தமாதம் 27 ஆந்திகதி  குறித்த வாலிபரினால்  துஸ்பிரயோகதுக்குட்பட்ட சிறுமி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெருங் குற்றத்தடுப்பு பொலிசாரினால் தேடப்பட்ட சந்தேக நபர் இன்று  சேனைகுடியிருப்பு கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டு  கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது  பதில் நீதிவான் எஸ்.பேரின்பராசா  சந்தேக நபரை எதிர்வரும் 16ஆந்  திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்..

பாலியல் துஸ்பிரயோகதுக்குட்பட்ட  சிறுமி  கல்முனை பொலிசாரின் உத்தரவுக்கமைய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த  வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய  பெருகுற்றதடுப்பு  பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top