கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரதேச செயலாளராக மொகான் விக்ரம ஆராட்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாகச் செயற்படும் வண்ணம் பொது நிருவாக உள்ளாட்டு அலுவல்கள் அமைச்சு இந்நியமனத்தை வழங்கியுள்ளது.

ஏற்கனவே  எம்.எம்.நௌபல்  பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது  அவரது திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து  கல்முனை பதில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.ஹனீபா கடமையாற்றிய நிலையிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மொகான் விக்ரம மஹஓயா பிரதேச செயலக பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக வரலாற்றில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

கருத்துரையிடுக

 
Top