வெசக் உற்சவ காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 15 திகதி வரையிலான இரு தினங்களில் நாட்டில் உள்ள சகல மது விற்பனை சாலைகளை மூடுமாறும் ஏனைய பெரிய வர்த்தக நிலையங்களில் மது விற்பனையை நிறுத்துமாறும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
அத்துடன் இத்தினங்களில் இறைச்சிக் கடைகள், ரேஸ் சூதாட்டம், கெசினோ நிலையங்களை மூடிவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் வெசக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாட்டில் உள்ள சகல அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top