கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆங்கில கற்கை நிலையம் திறந்து வைத்தல், மாணவர் தலைவர்கள் அறிமுக நிகழ்வு மற்றும் மணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு வழாவும் இன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வரும், ஶ்ரீ.ல.மு.கா. பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி கௌரவ எம். நிஸாம் காரியப்பர் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஶ்ரீ.ல.மு.கா. அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களும், மற்றும் பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.எம்.அன்சார், வலைய அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் “லீடர்ஸ்” சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், மாணவ தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் பிரதம அதிதி அவர்களுக்கு நினைவு வாழ்த்து மடல் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.


Post a Comment

 
Top