கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கடந்த கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சையில் திறமை சித்தி பெற்ற 24 மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று கல்லூரியில் இடம் பெற்றது .

கல்லூரி முதல்வர் அருட்  சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு  தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ஜெகநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .

நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் . திறமை சித்தி பெற்ற மாணவர்களை இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.கருத்துரையிடுக

 
Top