கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு- மரணமடைந்த நபர் ஒருவரின் சடலத்தை உரிமை கோர எவரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று, அம்பாறை வீதியை முகவரியாகக் கொண்ட 54 வயது நிரம்பிய ரட்ணசிங்கம் எனும் பெயரைக் கொண்ட இவர் கடந்த 2014-05-05 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 14 ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது சடலம் வைத்திய சாலை சைவச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது 
இது குறித்து இவரது மேற்படி முகவரிக்கு பொலிஸ் மூலம் தகவல் கொடுக்கப்பட்டும்  ஐந்து நாட்கள் கடந்தும்  இதுவரை எவரும் சடலத்தை கொண்டு செல்ல முன்வரவில்லை என கல்முனை பொலிசாரினால்  தெரிவிக்கப்படுகிறது..
ஆகையினால் இவரது உறவினர்கள் யாராவது இருந்தால் இச்சடலத்தை பொறுப்பேற்க முன்வருமாறு வைத்தியசாலை நிர்வாகமும் ,கல்முனை பொலிசாரும் கேட்டுள்ளனர்  

கருத்துரையிடுக

 
Top