ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் மாகாண சபையின் சில உயர் அதிகாரிகளும் அடங்கிய 
குழுவொன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (25) தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆசிய மன்றம் தனது செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற கல்முனை, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபைகள் மற்றும் அம்பாறை நகர சபை ஆகியவற்றின் சார்பில் தலா இருவர் வீதம் எட்டுப் பேர் உட்பட மொத்தம் 15 பேர் இக்குழுவில் இடம்பெறுகின்றனர் என ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில்  நட்பிட்டிமுனையை  சேர்ந்தவர்களான கல்முனை மாநகர சபையின் சார்பில் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், உள்ளூராட்சி உதவியாளர் எம்.சி.சர்ஜூன் தாரிக் அலி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் .


கருத்துரையிடுக

 
Top