கல்முனை சேனைக்குடியிருப்பு வின்னேர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சுமார் மூன்று வார காலமாக சேனைக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கல்முனைப் பிராந்தியத்திலிருந்து சுமார் 24 கழகங்கள் பங்கு கொண்டன.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (18) நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் கல்முனைப் பாண்டிருப்பு 'துளிர் விளையாட்டுக் கழகம் பிறேவர் விளையாட்டுக் கழகத்துடன் மோதிக்கொண்டது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய பிறேவர் பத்து ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்று இமாலய இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்தது.

இதில் அணித்தலைவர் ரிலாஸ் ஆஷிக், கிபாஸ் சிறப்பான அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்

எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துளிர் விளையாட்டுக்கழகம் ஒரு கட்டத்தில் 22/9 விக்கட்டுக்களை இழந்திருந்தனர்.

எனினும் அதன் அணித்தலைவர் போராடி தமது ஓட்ட எண்ணிக்கையை 48 க உயர்த்தி சகல விக்கட்டுக்களையும் தாரை வார்த்தனர். 

இதில் இஸ்மத் கிபாஸ் லிஹாஸ் மற்றும் கமீரின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் துளிர் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.

இதன்போது நற்பிட்டிமுனை பிறேவர் அணி வெற்றியை தனதாக்கி 2014 ம் ஆண்டுக்கான தமிழ்வாணன் நினைவுக் கிண்ணத்தை இரண்டாவது தடவையாக தனதாக்கிக்கொண்டது.

இப்போட்டியில் தொடர் ஆட்டநாயகனாக அணியின் தலைவர் றிலாஸும் போட்டியின் நாயகனாக ஆசிக்கும் தெரிவு செய்யப்பட்டனர்

கருத்துரையிடுக

 
Top