நற்பிட்டிமுனை கிராமத்தில் நீண்ட கால குறைகளில் ஒன்றாக காணப்பட்ட நற்பிட்டிமுனை மையவாடியை  துப்பரவு செய்வதற்கான  புல்  வெட்டும்  இயந்திரம் ஒன்றை கல்முனை   முன்னாள் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் நட்பிட்டிமுனைக்கு வழங்கியுள்ளார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார் கேட்டுக் கொண்டதற்கிணங்க முன்னாள் முதல்வரினால் நற்பிட்டிமுனை மென்ஸ்  சமுக சேவைகள் அமைப்புக்கு இந்த இயந்திரம் வழங்கப் பட்டுள்ளது.இதனை  கையளிக்கும்  வைபவம் இன்று மாலை முன்னாள் முதல்வரின் இல்லத்தில் இடம் பெற்றது. மாநகர சபை உறுப்பினரும் மென்ஸ்  சமுக சேவைகள் அமைப்பின்  தவிசாளருமான ஏ.எச்.எச்.எம்.நபார், அமைப்பின் ஆலோசகர் கே.எல்.அப்துல் கபூர் ,அமைப்பின் தலைவர் எஸ்.றுஷ்வீன் ,பிரதி தலைவர் ஜே.எம்.அயாஸ்  உட்பட  அமைப்பின் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர் . 

Post a Comment

 
Top